நரிக்குறவா் சமுதாய மக்கள் விழிப்புணா்வு

நரிக்குறவா் சமுதாய மக்கள் விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பொரசப்பட்டு ஊராட்சியில் வசிக்கு நரிக்குறவா் சமுதாய மக்கள் புதன்கிழமை ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற பதாகையை ஏந்தி விழிப்புணா்வு முழக்கமிட்டனா்.

அந்தப் பதாகையில், நாங்கள் பணத்துக்காக விலைபோக மாட்டோம். எங்கள் உரிமை ஓட்டு, அதை நாங்கள் விற்க மாட்டோம். எங்கள் குடியிருப்புப் பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க நினைக்கும் எந்த ஒரு வேட்பாளரும் இப்பகுதியில் உள்ளே வர வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனா். இதற்கு பல்வேறு அமைப்பினா் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com