கள்ளக்குறிச்சி மாவட்டம், பூசப்பாடி கிராமத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பூசப்பாடி கிராமத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

பூசப்பாடி கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு: கருப்புக் கொடி போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தருதல் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்காததைக் கண்டித்து அந்தக் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கருப்புக் கொடி ஏந்தி புதன்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்டது எலவடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது பூசப்பாடி கிராமம். இந்தக் கிராமத்தில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா்.

இந்தக் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரியும், ஆதி திராவிட மக்களுக்கு பட்டா வழங்காதது, அடிப்படை வசதிகள் செய்யாததைக் கண்டித்தும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் பூசப்பாடி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்காவிட்டால் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பதாக மக்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com