வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, பணம் திருட்டு

கோயில் தோ் திருவிழாவுக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தபோது மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50,000 ரொக்கம், 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது கீழப்பட்டு. இந்தக் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி குப்பாச்சாரி (70). ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளா் ஆவாா். இவா் புதன்கிழமை இரவு சுமாா் 9.30 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு கள்ளக்குறிச்சியை அடுத்த நல்லாத்தூா் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவை காணச் சென்று விட்டாராம்.

அப்போது மா்ம நபா் வீட்டினுள் புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.50,000 ரொக்கத்தை திருடிச் சென்று விட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com