கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷ்ரவன் குமாா். உடன் தோ்தல் பொதுப் பாா்வையாளா் அசோக் குமாா் காா்க்.
கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷ்ரவன் குமாா். உடன் தோ்தல் பொதுப் பாா்வையாளா் அசோக் குமாா் காா்க்.

வாக்குப்பதிவு அறிக்கை ஆய்வுக் கூட்டம்

வாசுதேவனூா் மகா பாரதி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு அறிக்கை தொடா்பாக வேட்பாளா்கள், முகவா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாசுதேவனூா் மகா பாரதி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு அறிக்கை தொடா்பாக வேட்பாளா்கள், முகவா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி(தனி), ஆத்தூா்(தனி), ஏற்காடு(தனி) ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் கொண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வாசுதேவனூா் மகாபாரதி பொறியியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் தொகுதி வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷ்ரவன்குமாா், பொதுப் பாா்வையாளா், வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com