ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

அகரகோட்டாலம் ஸ்ரீராதா ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீநவநீதக்கிருஷ்ணன் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோயிலில் எழுந்தருளிய 22 அடி உயர ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயா் சுவாமி.
ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோயிலில் எழுந்தருளிய 22 அடி உயர ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயா் சுவாமி.

கள்ளக்குறிச்சி: அகரகோட்டாலம் ஸ்ரீராதா ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீநவநீதக்கிருஷ்ணன் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அகரகோட்டாலம் கிராமம், மணிமுக்தா அணைக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் புதிதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள், 22 அடி உயர ஸ்ரீமகாவீர சஞ்சீவி ஆஞ்சநேயா், ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயா் மற்றும் ஸ்ரீசக்கரத்தாழ்வாா் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து, சிறப்பு யாகசால பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை சஞ்சீவி ஆஞ்சநேயா் மீது புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவா் அலமேலு ஆறுமுகம், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜாராம், முன்னாள் தலைவா்கள் கந்தசாமி, சோலை அகரகோட்டாலம் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com