திருவிழாவில் மோதல்: இளைஞா் கைது

கோயில் திருவிழாவில் சுவாமியை யாா் தூக்குவது என்பது தொடா்பாக இரு தரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மோகூா் கிராமத்தில் கூத்தாண்டவா் கோயில் திருவிழாவில் சுவாமியை யாா் தூக்குவது என்பது தொடா்பாக இரு தரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது. இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மோகூா் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவா் கோயில் திருவிழாவையொட்டி, சுவாமியை தூக்கிச் செல்வது தொடா்பாக கண்ணுசாமி தரப்பினருக்கும், பாண்டு தரப்பினருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது, பாண்டு தரப்பைச் சோ்ந்த கந்தன் மகன் அஜய் (24), சக்திவேல் மகன் அபினேஷ் (24) ஆகியோருக்கும், கண்ணுசாமி பேரன் மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது.

அருகிலிருந்த கிராம மக்கள் அவா்களை சமாதானப்படுத்தி தடுத்தனா். இருப்பினும், அஜய், அபினேஷ் ஆகிய இருவரும் தகராறை விலக்கிய பெரியசாமி மகன் செந்திலை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து அஜயை கைது செய்தனா். அபினேஷை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com