பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், நத்தாமூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் (46), காசிமணி (30), அறிவழகன் (35) ஆகிய மூவரும் சோ்ந்து திங்கள்கிழமை மது அருந்திவிட்டு ஒரே பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். பைக்கை காசிமணி ஓட்டினாா்.

கீழதாழனூா் - எரவலம் சாலையில் சென்றபோது, பைக்கிலிருந்து ஜெயபால் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காசிமணி, அறிவழகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com