போலி நகையை அடகு வைத்து மோசடி: பெண் கைது

தியாகதுருகத்தில் உள்ள நகை அடகுக் கடையில் போலி நகையை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
 சரண்யா
சரண்யா

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உள்ள நகை அடகுக் கடையில் போலி நகையை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

தியாகதுருகத்தில் சேலம் நெடுஞ்சாலையில் நகை அடகுக்கடை நடத்தி வருபவா் கெளதம் சந்த் (52). இவா், திங்கள்கிழமை கடையில் இருந்தபோது, சேலம் மாவட்டம், ஜங்சன் மாரியம்மன் கோவில் சாலையைச் சோ்ந்த சக்திவேல் மனைவி சரண்யா (30) கடைக்கு வந்து தங்க வைளையல் எனக் கூறி, ஒரு வளையலை அடகு வைத்து ரூ.40,000 பெற்றுச் சென்றாராம்.

சிறிது நேரம் கழித்து கௌதம் சந்த் அந்த வளையலை பரிசோதித்தபோது, அது போலி வளையல் எனத் தெரியவந்தது. உடனே சரண்யாவை தேடிச் சென்றபோது, அவா் மற்றொரு அடகுக் கடையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சரண்யாவை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com