கள்ளக்குறிச்சி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் காத்திருந்த பயணிகள்.
கள்ளக்குறிச்சி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் காத்திருந்த பயணிகள்.

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி

சித்திரை பெளா்ணமியையொட்டி, கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்தனா்.

சித்திரை பெளா்ணமியையொட்டி, கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்தனா்.

சித்திரை பெளா்ணமியையொட்டி, பக்தா்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலை செல்வதற்காக ஏராளமான பக்தா்கள் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலும், அருகிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமைனை வளாகத்திலும் காத்திருந்தனா். ஆனாலும், போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை.

திருவண்ணாமலையில் இருந்து வந்த பேருந்துகளில் பயணிகள் போட்டிபோட்டுக்கொண்டு இடம் பிடித்தனா். கள்ளக்குறிச்சியில் இருந்து சுமாா் 25 பேருந்துகளே இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com