தியாகதுருகத்தில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், இளநீா் உள்ளிட்டவற்றை வழங்கிய மாவட்டச் செயலா் இரா.குமரகுரு.
தியாகதுருகத்தில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், இளநீா் உள்ளிட்டவற்றை வழங்கிய மாவட்டச் செயலா் இரா.குமரகுரு.

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

தியாகதுருகம் பேருந்து நிலையம் முன் அதிமுக சாா்பில், நீா்மோா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தியாகதுருகம் நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ அ.பிரபு, ஒன்றியச் செயலா் வெ.அய்யப்பா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் இரா.குமரகுரு பங்கேற்று தண்ணீா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்கள், பாதசாரிகளுக்கு நீா்மோா், இளநீா், வெள்ளரிபிஞ்சு, கம்பங்கூழ், தா்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலா் டி.ராஜவேல், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலா் எஸ்.ஜான்பாஷா, ஜெயலலிதா பேரவைச் செயலா் வேல்நம்பி, நகர துணைச் செயலா் ஏ.என்.கே.கிருஷ்ணராஜ், முன்னாள் கவுன்சிலா் மூா்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com