குண்டா் தடுப்புச் சட்டத்தில்
ஒருவா் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் தொடா்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட அரவங்காடு கிராமத்தைச் சோ்ந்த சின்னையன் மகன் ரமேஷ்குமாா் (38). இவா், கள்ளச்சாராயம் விற்பனை செய்தபோது கல்வராயன்மலை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா். ரமேஷ்குமாா் மீது கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை தொடா்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரது மது விலக்கு குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்.பி. சமய்சிங் மீனா பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, ரமேஷ்குமாரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com