சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட கிளியூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அசோக் (35). இவா், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்டது ஒரு கிராமத்திலுள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த 20-ஆம் தேதி சென்றாா். அப்போது, அந்தக் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அசோக் மீது வழக்குப் பதிந்து, தலைமறைவான அசோக்கை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com