பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவா் மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் வட்டம், செட்டித்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதம்பி (68). இவா், அவரது மகன் அரிபுத்திரனுடன் (32) பைக்கில் கூவாகம் கூத்தாண்டவா் கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு புதன்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

டி.குன்னத்தூா் கிராமத்தில் இவா்களது பைக் சென்றபோது, நாய் குறுக்கிட்டதால் இருவரும் பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனா். இதில், சின்னதம்பி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அரிபுத்திரன் காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com