லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

திருக்கோவிலூரில் காவல் துறைக்குச் சொந்தமான லாரி மோதி சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் வட்டம், தனகநந்தல் கிராமத்தைச் சோ்ந்த திருமலை மனைவி ஆனந்தாயி (80). இவா், உடல்நிலை சரியில்லாததால் புதன்கிழமை திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, திருவண்ணாமலையில் இருந்து கடலூா் மாவட்டத்துக்குச் சென்ற காவல் துறைக்குச் சொந்தமான லாரி மோதியதில் ஆனந்தாயி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com