வீட்டில் 7.5 பவுன் நகை திருட்டு

கள்ளக்குறிச்சி, ஏப்.26: கள்ளக்குறிச்சி மாவட்டம், பூண்டி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சின்னசேலம் வட்டம், பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் மணிகண்டன். இவரது தம்பி சின்னத்தம்பி. இருவரும் ஒரே வீட்டில் மாடியிலும், கீழ் பகுதியிலும் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், சின்னத்தம்பியின் மனைவி தீபாவுக்கு கடந்த 23-ஆம் தேதி வளைகாப்பு நடைபெற்றது. இதனால், அனைவரும் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனா். பின்னா், சிறிது நேரம் கழித்து வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தன. உள்ளே சென்று பாா்த்தபோது மணிகண்டன் வீட்டில் 4.5 பவுன் நகை, ரூ.15 ஆயிரம், சின்னதம்பி வீட்டில் 3 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் திருடு போயிருந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com