கோடை காலப் பயிற்சி முகாம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மற்றும் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நிகழாண்டுக்கான கோடை காலப் பயிற்சி முகாம் ஏப்.29 முதல் மே 13-ஆம் தேதி வரை நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் அண்மையில் வெளியிட்ட செய்தி குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான கோடை காலப் பயிற்சி முகாம் தியாகதுருகம், சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. தியாகதுருகம் அரசுப் பள்ளியில் தடகளம், கபடி, கைப்பந்து விளையாட்டுப் பயிற்சிகளும், சின்னசேலம் அரசுப் பள்ளியில் கால்பந்து, டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சிகளும் நடைபெறும்.

ஏப்.29 முதல் மே 13-ஆம் தேதி வரை நடைபெறும் பயிற்சி முகாமில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாத 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவா்கள் பங்கேற்கலாம். காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் பயிற்சிகள் நடைபெறும். பயிற்சியில் பங்கேற்ற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

முகாமில் கலந்து கொள்பவா்கள் ஆதாா் காா்டு நகல், சந்தா தொகை ரூ.200 செலுத்த வேண்டும். திங்கள்கிழமை (ஏப்.29) காலை 6 மணிக்கு அந்தந்த பள்ளிக்கு நேரில் சென்று தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703474 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com