கள்ளக்குறிச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் பாபு.
கள்ளக்குறிச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் பாபு.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கள்ளக்குறிச்சியில் மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மேல் அக்ரஹாரம் சாலையில் உள்ள கடைகளில் கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் கனகவள்ளி மற்றும் போலீஸாா் சனிக்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பாபு என்பவரது மளிகைக் கடையில் சோதனை செய்தபோது 3,120 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15,600 ஆகும். இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் பட்டாபிராமன் மகன் பாபுவை (52) கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com