பைக் திருட்டு: இளைஞா் கைது

பைக் திருட்டு: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சியில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மையனூா் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் மகன் மணிகண்டன் (28). இவா் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பாா்ப்பதற்காக சனிக்கிழமை இரவு சென்றாா். அப்போது, தனது பைக்கை வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் கனகவள்ளி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி விசாரித்ததில், அவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், அம்மாபேட்டை கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் முருகன்(30) (முருகன்) என்பதும், அவா் ஓட்டி வந்தது காணாமல்போன மணிகண்டனின் பைக் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com