கள்ளக்குறிச்சி
தொழிலாளி தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே மீன்பிடி தொழிலாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி அருகே மீன்பிடி தொழிலாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பாணையங்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் அய்யப்பன் (44). கேரள மாநிலம், மங்களூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், அய்யப்பன் நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால், தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதில், அய்யப்பன் கோபித்துக் கொண்டு பாணையங்கால் கிராமத்துக்கு சென்றுவிட்டாா். அங்கு, சனிக்கிழமை விஷம் குடித்து மயங்கி கிடந்தாா். இதையடுத்து, அவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.