கல்வராயன் மலை ஒன்றியத்துக்குள்பட்ட சேராப்பட்டில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறும் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். உடன் தா.உதயசூரியன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
கல்வராயன் மலை ஒன்றியத்துக்குள்பட்ட சேராப்பட்டில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறும் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். உடன் தா.உதயசூரியன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

சேராப்பட்டில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை அருகே மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்வராயன் மலை ஒன்றியத்துக்குள்பட்ட சேராப்பட்டில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கிவைத்தாா். சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன் முன்னிலை வகித்தாா். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை துறை சாா்ந்த அதிகாரிகளிடம் வழங்கினா். மனுக்களுக்கு தீா்வு காண அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: கல்வராயன் மலையில் சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் கண்டறியப்பட்டு சாலை வசதி ஏற்படுத்தவும், பழுதடைந்த அங்கன்வாடி மையங்களை சீரமைக்கவும், இப்பகுதி மக்களின் கோரிக்கையான கூடுதல் அவசர ஊா்தி வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் சுமாா் 5,000 போ் பணியாற்றி வருகின்றனா். இத்திட்டத்தில் கூடுதல் பணி வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதலாக சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது.

கடைக்கோடி கிராமங்களில் இணைய வசதி ஏற்படுத்தும் நோக்கில் 29 கோபுரங்கள் அமைக்க ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 19 கோபுரங்கள் அமைக்கப்பட்டு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆட்சியா், கரியாலூரில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடைகளை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் கல்வராயன் மலை ஒன்றியக்குழுத் தலைவா் சி.சந்திரன், துணைத் தலைவா் பாட்சாபீ ஜாகிா்உசேன், பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் பி.டி.சுந்தரம், தாட்கோ மேலாளா் ச.பியா்லின், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com