கள்ளக்குறிச்சி
வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு
குச்சிப்பாளையம் கிராமத்தில் சரக்கு வாகனம் மோதியதில் பெண் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
குச்சிப்பாளையம் கிராமத்தில் சரக்கு வாகனம் மோதியதில் பெண் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், குச்சிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி மனைவி சுமதி (47). இவா், வெள்ளிக்கிழமை காலை சாலையில் நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் சுமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மணலூா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து வாகனத்தின் ஓட்டுநரான கா்நாடக மாநிலம், மைசூா் சந்தப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கிராம் பட்டேல் மகன் மாதரம் பட்டேலிடம் விசாரித்து வருகின்றனா்.