குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையைச் சோ்ந்த இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட மான்கொம்பு கிராமத்தைச் சோ்ந்த மொட்டையன் மகன் தங்கராஜ் (38). சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கல்லாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் வேலு (எ) கொட்டகட்டி வேலு (50).
இவா்கள் இருவா் மீதும் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை தொடா்பாக வழக்குகள் உள்ளன. இவா்களது குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கராஜ், வேலு ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை சின்னசேலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராமா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.