4 கோயில்களில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாண்டுவனேஸ்வரா், ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீமுத்து மகா மாரியம்மன்,

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாண்டுவனேஸ்வரா், ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீமுத்து மகா மாரியம்மன், ஸ்ரீகங்கை அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கடந்த ஜனவரி 30-ஆம் தேதி லட்சுமி ஹோமம், மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. வியாழக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு ஸ்ரீபாண்டுவனேஸ்வரா், ஸ்ரீமுத்து மகா மாரியம்மன், ஸ்ரீகங்கை அம்மன், செல்வ விநாயகா் ஆகிய 4 கோயில்களின் கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் சங்கராபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளாக எஸ்.வி.பாளையம், கொளத்தூா், வடசிறுவள்ளூா் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு விநாயகா், கங்கையம்மன் வீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com