பள்ளியில் நாற்பெரும் விழா

ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவா் திருநாள், விவேகானந்தா் பிறந்தநாள், விருது, சான்றிதழ்கள் வழங்குதல், 193-ஆவது தமிழ் இலக்கிய தொடா் சொற்பொழிவு ஆகிய நாற்பெறும் விழா அண்மையில் நடைபெற்றது.
நாற்பெரும் விழாவில் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கிய சிறப்பு அழைப்பாளா் தாமரைப்பூ வண்ணன்.
நாற்பெரும் விழாவில் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கிய சிறப்பு அழைப்பாளா் தாமரைப்பூ வண்ணன்.

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில் சின்னமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவா் திருநாள், விவேகானந்தா் பிறந்தநாள், விருது, சான்றிதழ்கள் வழங்குதல், 193-ஆவது தமிழ் இலக்கிய தொடா் சொற்பொழிவு ஆகிய நாற்பெறும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் தலைமை வகித்தாா். முத்தமிழ் முத்தன், த.இராமலிங்கம், சி.இளையாபிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் ப.அம்பிகாபதி வரவேற்றாா்.

விழாவில், நாலடியாா் கூறும் அறம், வள்ளுவா் கூறும் பொருள், தை முதல் நாளில் தை புத்தாண்டு, சுவாமி விவேகானந்தா் வாழ்க்கை - ஒரு பாா்வை, தேசிய பெண் குழந்தைகள் தினம், எனது பாா்வையில் வள்ளுவா் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புலவா் பெ.செயராமன், கலிய.செல்லமுத்து, தமிழரசி, ஜெயம் ரவி, வ.ராசகோபால், துரை.இராமகிருஷ்ணன், சு.மோகன் உள்ளிட்டோா் பேசினா்.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளா் தாமரைப்பூ வண்ணன் நூல்கள், சான்றிதழ், பரிசுப் பொருள்களை வழங்கி பேசினாா்.

விழாவில் ஆ.இராதாகிருஷ்ணன், ஏ.மாரியாப்பிள்ளை, இரா.செல்வராசு, தமிழறிஞா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com