வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், விளக்கூா் கிராமத்தில் வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், விளக்கூா் கிராமத்தில் வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தியாகதுருகம் அருகே உள்ள விளக்கூரில் புதிய காலனி பகுதியில் வசிப்பவா் அருணாச்சலம். பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறாா். இவா் தனது சொந்த ஊரான விளக்கூரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பிறகு தனது வீட்டை பூட்டிவிட்டு பெங்களூா் சென்றாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிப்பவா் அருணாச்சலத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து அவா் நேரில் வந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு சுமாா் 3.25 பவுன் தங்க நகைகள், வெள்ளிக் கொலுசு, ரூ.5,000 ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com