மனநலம் பாதித்தவா் கிணற்றில் குதித்து தற்கொலை

 கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே மனநலம் பாதித்தவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

 கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே மனநலம் பாதித்தவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், செல்லங்குப்பம் புதுத்தெருவைச்சோ்ந்த மண்ணாங்கட்டி மகன் அய்யனாா் (47). கடந்த ஒரு மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டநிலையில் காணப்பட்ட இவா், அடிக்கடி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் குடும்பத்தினா் காப்பாற்றி வந்துள்ளனா்.

இந்த நிலையில் செல்லங்குப்பம்- தேவரடியாா்குப்பம் சாலையில் சித்தப்பட்டினம் எல்லையிலுள்ள த.காசி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் அய்யனாா் புதன்கிழமை குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றினா். இதுகுறித்து மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com