பைக் மீது வாகனம் மோதல்: இளைஞா் மரணம்

 கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

 கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், இராமநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த செல்லதுரை மகன் ஜெயக்குமாா் (23). இவா், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், ஜெயக்குமாா் தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தென்கீரனூா் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில், ஜெயக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com