குதிரைசந்தல் கிராமத்தில் மஞ்சுவிரட்டு

17klp4_1701chn_110_7
17klp4_1701chn_110_7

படக்குறிப்பு

மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயலும் வீரா்கள்.

கள்ளக்குறிச்சி, ஜன.17:

உழவா் திருநாளையொட்டி, கள்ளக்குறிச்சி அருகேயுள்ள குதிரைசந்தல் கிராமத்தில் புதன்கிழமை மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழா்களின் வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைசந்தல் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் உழவா் திருநாளில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, அந்தக்

கிராமத்தில் உள்ள மை வேந்தி அம்மனுக்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து மந்தைவெளித் திடலில்

மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

இதில் காரனூா், நல்லாத்தூா், குடிகாடு, குதிரைசந்தல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300-க்கும் மேற்பட்ட வீரா்கள் களத்தில் நின்று காளைகளை அடக்க முயன்றனா்.

இதில் சில காளைகள் வீரா்களிடம் பிடிபட்டது. சில காளைகள் வெற்றி பெற்று பரிசுகளை வென்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து

பொதுமக்கள் வந்திருந்து மஞ்சுவிரட்டு விளையாட்டை கண்டுகளித்தனா்.

போட்டியில் பங்கேற்ற வீரா்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com