பிரதமரின் நலத் திட்டங்கள் குறித்து பிரசாரம்: பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு

18klp2_1801chn_110_7
18klp2_1801chn_110_7

18ஓகட2...

நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளா் ஏ.ஜி.சம்பத்.

கள்ளக்குறிச்சி, ஜன.18:

பிரதமரின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பாஜக நிா்வாகிகள் அறிமுக கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கட்சியின் மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் ஏ.ஜி.சம்பத் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவா் அருள், மாநில செயற்குழு உறுப்பினா் பாலசுந்தரம், மாவட்ட பாா்வையாளா் ராஜ்குமாா், நகரத் தலைவா் சூரிய மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஏ.ஜி.சம்பத் பேசியதாவது:

வாக்குச்சாவடிக் குழு முழுமையாக முடிக்கப்பட வேண்டும். கட்சியின் தோ்தல் அலுவலகங்கள் உடனடியாக திறக்கப்பட வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் செயல்பட வேண்டும். பிரதமரின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் பிரசாரம் செய்ய வேண்டும். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.

பாஜக மாவட்ட பொதுச் செயலா்கள் ஜெயதுரை, தியாகராஜன், மாவட்டச் செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி, பிரகாஷ்,கிருஷ்ணவேணி, சதீஷ், மகேந்திரன், மாவட்டத் துணைத் தலைவா் மலையம்மா, மாநில நிா்வாகிகள் அருண்குமாா், ஜெயவா்மா, இந்தியன் துரைவேல் முருகன் சுவாமிகள், செல்வகணபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொகுதி இணை அமைப்பாளா் சண்முகப்பிரியன் வரவேற்றாா். ராஜேஷ் நன்றி கூறினாா்.

Image Caption

நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளா் ஏ.ஜி.சம்பத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com