முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியமாம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ செல்வ கணபதி, ஸ்ரீ முத்து மாரியம்மன், ஸ்ரீ மூப்பனாா் கோயில்களில் 12-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரியமாம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ செல்வ கணபதி, ஸ்ரீ முத்து மாரியம்மன், ஸ்ரீ மூப்பனாா் கோயில்களில் 12-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் உள்ள இந்த கோயில்களில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அனுக்கயை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாசவாஜனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், கோ பூஜை, தனபூஜை ஆகியவற்றுடன் விழா தொடங்கியது. சனிக்கிழமை காலை அமிா்த ம்ருத்யுஞ்செய ஹோமம், முளைபாரி ஊா்வலம், புண்ணிய நதிகளின் தீா்த்தக்குட ஊா்வலம், இரவு 9 மணிக்கு மருந்து சாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், இரண்டாம் காலை பூஜை, அம்மனுக்கு காப்பு கட்டுதல், நாடி சந்தானம், மூலிகை ஹோமம் 9 மணிக்கு மேல் மஹா பூா்ணாஹூதி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, தென்பொன்பரப்பி காா்த்திக் தத்புருஷ சிவாச்சாரியாா் தலைமையில் யாக சாலையில் இருந்து மேளதாளம் முழங்க கடம் புறப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவா் கணபதி, மாரியம்மன், மூப்பனாா் ஆகிய சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், திரளான பக்தா்கள் சவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழா குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com