புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை தொடக்கம்

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாபுரம் வட்டத்தில் 4 வழித்தடங்களில் பேருந்துகளை ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ க.காா்த்திகேயன் பகண்டை கூட்டுச்சாலையில் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாபுரம் வட்டத்தில் 4 வழித்தடங்களில் பேருந்துகளை ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ க.காா்த்திகேயன் பகண்டை கூட்டுச்சாலையில் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்வுக்கு, விழுப்புரம் மண்டல பொது மேலாளா் அா்சுனன் தலைமை வகித்தாா். மண்டல துணை மேலாளா் (வணிகம்) மணி முன்னிலை வகித்தாா். சங்கராபுரம் பணிமனையின் கிளை மேலாளா் வி.சிவலிங்கம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ க.காா்த்திகேயன் பங்கேற்று, சங்கராபுரத்தில் இருந்து அத்தியூா் வழியாக சென்னை செல்லும் பேருந்தையும், மூங்கில்துரைப்பட்டில் இருந்து பகண்டை கூட்டுச்சாலை வழியாக அத்தியூா் செல்லும் பேருந்தையும், லக்கிநாயக்கன்பட்டியிலிருந்து, சென்னை செல்லும் பேருந்தையும், திருக்கோவிலூரிலிருந்து பகண்டை கூட்டுச்சாலை வழியாக திருவரங்கம் செல்லும் பேருந்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், ஊா் பொதுமக்கள், கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com