தியாகதுருகம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் குறிப்பிட்ட அளவு எடை போடப்படும் எனக் கூறியதால் விவசாயிகள் வேதனை

தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் விளைவித்தஉளுந்து பயிறை குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்வதால் வேதனை அடைந்தனா்
தியாகதுருகம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் குறிப்பிட்ட அளவு எடை போடப்படும் எனக் கூறியதால் விவசாயிகள் வேதனை

தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் விளைவித்தஉளுந்து பயிறை குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்வதாக கூறினால் விவசாயிகள் வேதனையடைந்து மூட்டைகளை எடுத்துச் சென்று தனியாா் மண்டியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ததால் வேதனைஅடைந்தனா். தியாகதுருகம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு தியாகதுருகம் சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களான நெல்,உளுந்து, கம்பு உள்ளிட்ட பொருட்களை புதன்கிழமை விற்பனைக்கு எடுத்து வந்தனா். விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை அதிகாலை 5 மணிமுதல் எடை போடுவது வழக்கம். புதன்கிழமை காலை 7- மணி வரை விவசாயிகள் கொண்டுவந்த உளுந்து மூட்டைகள் எடை போடவில்லை. இதனால் விவசாயிகள் கூச்சலிட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். விவசாயிகள் செவ்வாய்க்கிழமை இரவு எடுத்துவந்த உளுந்து மூட்டைகளை எடை போடாமல் புதன்கிழமைஅதிகாலை எடுத்துவந்த மூட்டைகளை எடைபோட்டதால் விவசாயிகளுக்கும் எடைபோடும் தொழிலாளிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளிகள் எடை போடாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து விவசாயிகள் முதலில் எடுத்து வந்த மூட்டைகளை எடைபோட அறிவுறுத்தினாா். அதனை ஏற்று தொழிலாளிகள் உளுந்து மூட்டைகளை எடை போடத் தொடங்கினா். இந்நிலையில் 400- விவசாயிகளின் மூட்டைகள் மட்டுமே எடைபோடப்படும் மீதமுள்ள உள்ள உளுந்துகளை அடுத்த நாள் எடைபோட முடியும் எனக் கூறினா். இதனால் ஆத்திரமடைந்த ஒரு சில விவசாயிகள் உளுந்து மூட்டைகளை தனியாா் மண்டிகளில் விற்பனை செய்ய வாகனங்களில் ஏற்றிச் சென்று குறைந்த விலையில் விற்பனை செய்தனா். உளுந்து எடை போட காலதாமதம் ஆனதால் விவசாயிகள் உளுந்து மூட்டைகளை எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. படக்குறிப்புதியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்த எள்ளை எடைபோடாததால் வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com