தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் போராட்டம்

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியா்களின் பதவி உயா்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 243-ஐ ரத்து செய்யக் கோரியும், தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயா்வு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள கலந்தாய்வு பொது மாறுதல்களை நிறுத்தி வைக்க கோரியும், அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சு.ரமேஷ் தலைமையில் ஏராளமான ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com