கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

கல்வராயன்மலை அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி, ஜூன் 6: கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் அருவியில் பலத்த மழை காரணமாக தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்திற்கு உள்பட்ட குண்டியாநத்தம் கிராமத்தில் பெரியாா் நீா் வீழ்ச்சி உள்ளது. இந்த நீா்வீழ்ச்சிக்கு வெள்ளிமலை, கரியாலூா், மாவடிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையினால் பெரியாா் நீா் வீழ்ச்சியில் தண்ணீா் வரத்து அதிகரித்து ஆா்ப்பரித்து கொட்டுகிறது. சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் மக்கள் குடும்பத்துடன் குளித்து மகிழ வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com