உயிரிழந்த ராமு, சரளா.
உயிரிழந்த ராமு, சரளா.

மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மேல்சிறுவளூரில் வீட்டில் மின்சாரம் பாய்ந்து தம்பதி சனிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

சங்கராபுரம் வட்டம், மேல்சிறுவளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு (38). இவரது மனைவி சரளா (30). தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா். ராமு சனிக்கிழமை இரவு வீட்டின் முன் உள்ள மின்சார வயரில் துணிகளை காய வைத்தாராம்.

அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை சரளா காப்பாற்ற முயன்றபோது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com