பேருந்து மோதி காயமடைந்தவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசுப் பேருத்து மோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசுப் பேருத்து மோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டம், பூண்டிஅம்மையகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (55). இவா் கடந்த 4-ஆம் தேதி பூண்டி விநாயகபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது, கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ராமசாமி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவா், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com