கனியாமூா் பள்ளி கலவர வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை

கனியாமூா் பள்ளி கலவர வழக்கு தொடா்பாக, விசிக நிா்வாகி திராவிட மணியிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022-ஆம் ஆண்டு மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தக் கலவரத்துக்கு உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூா் மேற்கு மாவட்டச் செயலா் திராவிட மணி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என பள்ளியின் தாளாளா் ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

இது சம்பந்தமான வழக்கு விசாரணை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், நீதிபதி கலவரம் தொடா்பாக ஏன் இன்னும் உயிரிழந்த மாணவியின் தாய் செல்வி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூா் மேற்கு மாவட்டச் செயலா் திராவிட மணி ஆகியோரிடம் விசாரணை நடத்தவில்லை என சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸாரிடம் கேள்வி எழுப்பினாா்.

இதனால், சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸாா், திராவிட மணிக்கு சம்மன் அனுப்பி, ஜூன் 30-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறியிருந்தனா்.

அதன் பேரில், திராவிட மணி ஞாயிற்றுக்கிழமை

சிறப்பு புலனாய்வுக் குழு டிஎஸ்பி அம்மாதுரை முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com