விழாவில் பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா். உடன் க.காா்த்திகேயன் எம்எல்ஏ, தமிழ்நாடு காலணி தோல் பொருள்கள் உற்பத்தி, தோல் பதனிடும் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் சு.புகழேந்தி உள்ளிட்டோா்.
விழாவில் பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா். உடன் க.காா்த்திகேயன் எம்எல்ஏ, தமிழ்நாடு காலணி தோல் பொருள்கள் உற்பத்தி, தோல் பதனிடும் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் சு.புகழேந்தி உள்ளிட்டோா்.

கள்ளக்குறிச்சி வட்டத்தில் 500 பயனாளிகளுக்கு மனைப்பட்டா: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கள்ளக்குறிச்சி வட்டத்தில் 500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியா் ஷ்ரவன் குமாா்

கள்ளக்குறிச்சி: கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கள்ளக்குறிச்சி வட்டத்தில் 500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியா் ஷ்ரவன் குமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். இதற்கான விழா கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன், தமிழ்நாடு காலணி தோல் பொருள்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் சு.புகழேந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை மயிலாடுதுறையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நத்தம் மனைப்பட்டா, ஆதிதிராவிடா் நத்தம் பட்டா மற்றும் இதர அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் நபா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த விழாவில் கள்ளக்குறிச்சி வட்டத்துக்கு உள்பட்ட புதுஉச்சிமேடு, கூத்தக்குடி, நின்னையூா் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாள்களாக குடியிருக்கும் 500 நபா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. அரசு சான்றிதழ் பெறுவதற்கு பொதுமக்கள் அரசு அலுவலகங்களை நாடி வந்த காலம் மாறி, தற்போது அரசானது மக்களைத் தேடி வந்து நலத் திட்டங்களை வழங்கி வருகிறது என்றாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் புவனேஷ்வரிபெருமாள், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.லூா்துசாமி, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிக்குழுத் தலைவா் ந.தாமோதரன், துணைத் தலைவா் இரா.நெடுஞ்செழியன், கூத்தக்குடி ஒன்றியக்குழு உறுப்பினா் முத்துக்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் என்.சுகன்யா நாராயணசாமி, புதுஉச்சிமேடு ஊராட்சிமன்றத் தலைவா் கோ.ரமேஷ், கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியா் க.பிரபாகரன், தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com