தீப்பற்றி எரிந்த காா்

தீப்பற்றி எரிந்த காா்

கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டிருந்த காா் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட செங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த சிதம்பரம் மகன் அருள். இவரது தம்பியின் மனைவிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாம். இதற்காக, அருள் தனது குடும்பத்தினருடன் காரில் மருத்துவமனைக்கு சென்றாா். காரை மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றனா். இந்த நிலையில், காரின் முன்பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே, அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் அ.வீரபாண்டியன் தலைமையில் குழுவினா் நிகழ்விடம் சென்று தீப்பற்றி எரிந்த காரை தண்ணீரை பீச்சி அணைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com