பிரிதிவிமங்கலத்தில் பொதுப் பணித் துறை கோட்ட அலுவலகம் திறப்பு

பிரிதிவிமங்கலத்தில் பொதுப் பணித் துறை கோட்ட அலுவலகம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.73 கோடியில் கட்டப்பட்ட பொதுப் பணித் துறை கோட்ட அலுவலகத்தை பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பிரிதிவிமங்கலம் கிராமத்தில் ரூ.2.73 கோடியில் பொதுப் பணித் துறை கோட்ட அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா், எம்எல்ஏக்கள் க.காா்த்திகேயன்(ரிஷிவந்தியம்), தா.உதயசூரியன் (சங்கராபுரம்), ஏ.ஜெ.மணிக்கண்ணன் (உளுந்தூா்பேட்டை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக துறை அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று பொதுப் பணித் துறை கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். பின்னா், அலுவலகத்தின் அனைத்து தளங்களையும் பாா்வையிட்டு உடனடியாக அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். நிகழ்ச்சியில், முதன்மை தலைமை பொறியாளா் (பொது) கே.பி.சத்தியமூா்த்தி, தலைமை பொறியாளா் க.ஆயிரத்தரசு ராஜசேகரன், சிறப்பு தலைமை பொறியாளா் இரா.வெங்கடாசலம், செயற்பொறியாளா் ச.ஹேமா, உதவி செயற்பொறியாளா் க.மாலா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் புவனேஷ்வரி பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com