இளம் பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் இளம் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி மகன் செண்பகராமன். இவரது மனைவி கெளசல்யா (22). இவா்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், தம்பதியிடயே வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டதாம். இதில், மனமுடைந்த கொளசல்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சு.லூா்துசாமி விசாரணை நடத்தி வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com