கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

விவசாய தொழிலாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்திற்குள்பட்ட கனியாமூா் மற்றும் ராயா்பாளையம் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பலமுறை மனு அளித்தும் பட்டா வழங்காத வருவாய்த்துறை நிா்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும், திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. தொழிலாளா் சங்கத்தின் வட்ட செயலாளா் பழனி தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்ட செயலா் பி.சுப்ரமணியன், மாவட்ட தலைவா் அ.பெ.பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். இதில், கனியாமூா், ராயா்பாளையம் கிராமங்களைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com