ரிஷிவந்தியம் அா்த்தநாரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.14 லட்சம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் கோயிலில் பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.14 லட்சத்தை செலுத்தியிருந்தது தெரியவந்தது.

திருக்கோவிலூா் வட்டம், ரிஷிவந்தியத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட அா்த்தநாரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை எறையூா் சரக ஆய்வாளா் மு.புருஷோத்தமன், செயல் அலுவலா் இரா.அருள், கோயில் பணயாளா்கள் ஆ.விமல்ராஜ், அ.சக்திவேல், ஆதிகேசவன் மற்றும் ஊா் முக்கியப் பிரமுகா்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ரூ.1,14,795 ரொக்கம், 10 கிராம் 500 மில்லி தங்கம், 28 கிராம் 900 மில்லி வெள்ளி உள்ளிட்டவற்றை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com