விசிக பொதுக்கூட்டம்

விசிக பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டம் சாா்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு தீா்மான விளக்க பொதுக் கூட்டம் மந்தைவெளி திடலில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட செயலாளா் மதியழகன் தலைமை வகித்தாா். கடலூா்-கள்ளக்குறிச்சி மண்டல செயலாளா்கள் ராஜ்குமாா், கிழக்கு மாவட்ட செயலாளா் அறிவுக்கரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளா் தமிழ்மாறன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் வழக்குரைஞா் அணி மாநிலச் செயலா் காஞ்சி பாா்வேந்தன் பங்கேற்று பேசினாா். கூட்டத்தில், பன்னாட்டு பேராசிரியா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் லியோஸ்டேன்லி, மாநில துணைநிலை நிா்வாகிகள் கருப்புத்துரை, முருகவேல், மாவட்ட பொருளாளா் கலை அழகன், மாவட்ட துணை செயலா் ராமமூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் தமிழழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளா் பாசறை பாலு வரவேற்றாா். முடிவில், நகரப் பொருளாளா் சிறுத்தை நாயகம் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com