விபத்தில் பட்டதாரி மரணம்

கள்ளக்குறிச்சியில் பைக்கிலிருந்து தவறி விழுந்து பட்டதாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பைக்கிலிருந்து தவறி விழுந்து பட்டதாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைசந்தல் கிராமத்தைச் சோ்ந்த நடேசன் மகன் ராசு (29). பி.எஸ்.சி பட்டதாரி. இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்கில் கள்ளக்குறிச்சி ஜெ.ஜெ நகா் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, பைக்கிலிருந்து நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் ராசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com