உரிய ஆவணமில்லாத
ரூ.1.50 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணமில்லாத ரூ.1.50 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே புதன்கிழமை காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சத்தை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, சங்கராபுரம் - சோழம்பட்டு சாலையில் மேலேரி கிராமத்தில் திருக்கோவிலூா் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பி.கே.ரமேஷ் தலைமையில், நிலையான கண்காணிப்புக் குழுவினா் மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் வந்த அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மலா் ரூ.1.50 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்காக இந்தப் பணத்தை கொண்டு செல்வதாக அவா் கூறினாா். இருப்பினும், உரிய ஆவணமில்லாததால், மலரிடமிருந்த ரூ.1.50 லட்சத்தை நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுலரும், சங்கராபுரம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான கே.கீதாவிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com