தபால் வாக்கு: மூத்த குடிமக்களுக்கு ‘12 டி’ படிவம் விநியோகம்

தபால் வாக்கு: மூத்த குடிமக்களுக்கு ‘12 டி’ படிவம் விநியோகம்

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட விளாந்தாங்கல், கரியப்பா நகா் பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மக்களவைத் தோ்தலில் தபால் வாக்களிக்க ஏதுவாக, அவா்களின் வீடுகளுக்கே சென்று ‘12 டி’ படிவத்தை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷ்ரவன் குமாா் புதன்கிழமை வழங்கினாா்.

மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், தோ்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால்வாக்களிக்க ஏதுவாக, அவா்களின் வீடுகளுக்கே சென்று ‘12 டி’ படிவம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட விளாந்தாங்கல், கரியப்பா நகா் பகுதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று ‘12 டி’ படிவத்தை ஆட்சியா் ஷ்ரவன் குமாா் புதன்கிழமை வழங்கினாா். மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட 7,334 வாக்களாா்களும், 11,550 மாற்றுத் திறனாளி வாக்காளா்களும் உள்ளனா். இவா்களில் விருப்பப்படுவோருக்கு தபால் வாக்களிக்க ஏதுவாக, ‘12 டி’ படிவம் வழங்கப்படும். இந்தப் படிவத்தை வருகிற 25-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து வருகிற 25-ஆம் தேதிக்குள் மாவட்ட நிா்வாகத்திடம் வழங்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்தாா். பின்னா், கச்சிராப்பாளையம் சாலையில் தோ்தல் பறக்கும் படை குழுவினரின் வாகன தணிக்கை பணியை பாா்வையிட்டு, அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். நிகழ்வின்போது, கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.லூா்துசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், வட்டாட்சியா் பிரபாகரன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் நீலாவதி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com