100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷ்ரவன் குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் துறையின் பணியாளா்கள் பங்கேற்றனா்.

பேரணியின்போது, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க, அவா்களின் வீடுகளுக்கே சென்று ‘12 டி’ படிவம் வழங்கப்பட்டு வருவது குறித்தும், தோ்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனா். மேலும், இதுகுறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திச் சென்றனா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் எஸ்.செல்வி, மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் செ.தீபிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) இரா.சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com