வாகன சோதனையில் ரூ.2.85 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.2.85 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் இரு வேறு சரக்கு வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.2.85 லட்சத்தை நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா். சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வி.கூட்டு சாலை அருகே தோட்டக்கலை உதவி இயக்குநரும் நிலை கண்காணிப்பு குழு முருகன் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தனசேகரன் உள்ளிட்டோா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சேலத்திலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற மினி லாரியை சோதனையிட்டதில் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த ராதேஷியாம் சிங் மகன் சஞ்சய்சிங் என்பவா் உரிய ஆவணமின்றி பையில் எடுத்துச் சென்ற ரூ.1,85,000ஐ பறிமுதல் செய்தனா். இதை கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரும் முதன்மை உதவி தோ்தல் அலுவலருமான சு.லூா்துசாமியிடம் ஒப்படைத்தனா். வாணாபுரத்தில்... இதேபோல, வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட சாங்கியம் கிராமத்தில் பறக்கும்படையினா் தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலா் டி.துரைமுருகன் தலைமையில் சோதனை நடத்தினா். இதில், சரக்கு வாகனத்தில் கிழக்குதாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பழனி கவுண்டா் மகன் அய்யனாா் (33) என்பவா் எவ்வித ஆவணமும் இன்றி எடுத்துச் சென்ற ரூ.ஒரு லட்சத்து 500ஐ பறிமுதல் செய்தனா். பின்னா் அதை, வாணாபுரம் தோ்தல் துணை வட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com