பைக் மீது பேருந்து மோதல்: ஒருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சனிக்கிழமை பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், தண்டலை கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் குசேலன் (41). இவா், பைக்கில் சங்கராபுரம் சென்றுவிட்டு வடசேமபாளையம் மாவு ஆலை அருகே சென்றபோது, அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் குசேலன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான தியாகதுருகம் பெரியாா் நகரைச் சோ்ந்த பிச்சுமணி மகன் சங்கா் (52) மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com